Magme College of Agriculture & Tech

Magme College of Agriculture and Tech

Upcoming Event

LightBlog

Breaking

Sunday, August 7, 2022

பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் கலப்பு இனங்கள்

 கலப்பு இனங்கள்


 

கலப்பு இனங்கள்  

கலப்பின ஜெர்சி

  • வகைப்படுத்தாத உள்நாட்டு மாட்டினங்களை ஜெர்சி இன விந்துக்களை கொண்டு
  • கருவூட்டல் செய்யும் போது ஜெர்சி கலப்பின மாடுகள் உருவாக்கப்படுகின்றன.
  • ஜெர்சி கலப்பின மாடுகள் நமது நாட்டின் சமவெளிப்பகுதிகளுக்கு ஏற்ற மாட்டினங்கள்
  • இவைகள் சுமாரான உடல் அமைப்பையும், அதிக வெப்பம் தாங்கும் திறனையும் பெற்றுள்ளன.
  • உள்நாட்டு இனங்களின் பால் உற்பத்தி திறனுக்கு ஏற்ப, ஜெர்சி கலப்பின மாடுகள்
  • 2 முதல் 3 மடங்கு அதிக பால் உற்பத்தி திறனை கொண்டிருக்கும்.
jersey cross

கலப்பின ஹோல்சியன் பிரீசியன்

  • கலப்பின ஹோல்சியன் பிரிசியன் மாடுகள் குறைந்த வெப்பம் தாங்கும் திறனை பெற்றிருப்பதால், இவைகள் நம் நாட்டின் குளிர் பிரதேசங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் மிகவும் ஏற்றவை.
  • இவைகள் ஜெர்சி கலப்பின மாடுகளைவிட குறைவான நோய் எதிர்ப்புத் திறனை பெற்றுள்ளன.
  • இவைகள் அதிக பால் உற்பத்திதிறனை பெற்றிருந்தாலும், ஜெர்சி கலப்பின மாடுகளை விட பாலில் குறைவான கொழுப்பு சத்து கொண்டவை.
holstein friesian crosses

Source : தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை

No comments:

Post a Comment