Magme College of Agriculture & Tech

Magme College of Agriculture and Tech

Upcoming Event

LightBlog

Breaking

Sunday, August 7, 2022

வேளாண் வனத் திட்டங்களின் வகைகள்

 வேளாண் வனத் திட்டங்களின் வகைகள்

 


1.அமைப்புகளின் அடிப்படையிலான வகைப்பாடு :
(அ) திட்டப்பிரிவுகளின் இயற்கை

I) வேளாண் மர வளர்ப்புத் திட்டம்

இத்திட்டத்தில் மரங்களுக்கிடையே வேளாண் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. வேளாண் பயிர்கள் இறவை (அ) மானாவாரியாக நான்கு ஆண்டுகள் வரை சாகுபடி செய்யப்படுகிறது. பயிர்சாகுபடி லாபகரமற்றதாக மாறும் வரை பயிர்சாகுபடி செய்யலாம். தீவனப்பயிர்கள், நிழல் விரும்பும்பயிர்கள் மற்றும் சல்லி வேர் கொண்ட பயிர்கள் சாகுபடி செய்வது சிறப்பு ஒரு முக மரவளர்ப்பதை விடவும் இவ்வகையில் மரங்கள் செழித்து வளர்க்கின்றன.


II) முல்லைப்புல்பரப்புத் திட்டம்

கடினமான மரக்கட்டை தரும் மரங்கள் தீவனப்பயிர்களுடன் வளர்க்கப்படும் முறையே முல்லைப்புல் பரப்பு முறையாகும். இம்முறையில் மரங்கள் மற்றும் புதர்கள் கால்நடைத்தீவனம் மற்றும் மரக்கட்டை விறகு மற்றும் பழம் உற்பத்திக்கும், மண்ணை வளப்படுத்தவும் பயன்படுகிறது.
இம்முறை மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது

அ. புரத வங்கி
ஆ. தீவனமரங்களின் உயிர்வேலி மற்றும் தடுப்பு
இ. மேய்ச்சல் நிலப்பகுதிகளில்  மரம் மற்றும் புதர் வளர்ப்பு

அ. புரத வங்கி:
பன்முக மரங்கள் (புரதம் நிறைந்தவை) பண்ணையின் சுற்று வரப்புகளில் வளர்க்கப்படுகின்றன. இம் மரங்களின் பசுந்தாள் இலைகள் அவ்வப்போது வெட்டியெடுத்துச் செல்லப்பட்டு கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு வேலம், வாகை, வேம்பு அகத்தி.

ஆ. தீவனமரங்களின் உயிர்வேலி மற்றும் தடுப்பு:
பல்வேறு வகையான மரங்கள் மற்றும் குத்துச் செடிகள்  பரவலாகவோ, ஒழுங்கமைப்புடனோ (அ) ஒழுங்கமைப்பற்றோ, தீவனத்தேவையை தீர்ப்பதற்காக வளர்க்கப்படுகின்றன.
(எ-கா) வேலம், அகத்தி, கல்யாண முருங்கை

இ.மரங்கள் மற்றும் புதர்கள் வளர்ப்பு:
மேய்ச்சல் நிலங்களில் பல்வேறு வகையான மரங்கள் மற்றும் புதர்கள் தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்காக வளர்க்கப்படுகின்றன. (எ-கா) புளியமரம், வேம்பு, வேலம் மற்றும் அகத்தி


III) வேளாண் முல்லைப்புல் பரப்புத் திட்டம்

பல்லாண்டு மரங்களுடன் தீவணப்புற்களையும், வேளாண் பயிர்களையும் வளர்த்தெடுப்பது வேளாண் முல்லைப்புல்பரப்புத் திட்டமாகும்.
அ.வீட்டுத் தோட்டங்கள்
ஆ.மரத் தடுப்பு வரிசைகள்

அ.வீட்டுத் தோட்டங்கள்

இம்முறையானது மிதமிஞ்சிய மழைப்பொழியும் வெப்ப மண்டலப்பகுதிகள் மற்றும் தென்கிழக்கு ஆரிய நாடுகளில் பிரபலமாக உள்ளது. இம்முறை ஈரப்பதமிக்க வெப்பப் பகுதிகளான தமிழ்நாடு,கேரளா பகுதிகளில் தென்னை முக்கியப் பயிராகவுள்ள இடங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.வேறுபட்ட இனங்களில் மரங்கள்,குத்துச்செடிகள், காய்கறிகள் மேலும் சிறு செடிகள் அடர்த்தியாகவும் வெவ்வேறு அமைப்பிலும் வளர்க்கப்படுகின்றன. மாடு அல்லது ஆடு மற்றும் பறவைகள் இகைளுடன் பராமரிக்கப்படுகின்றன, தீவனம் தரும் மரங்கள் கால்நடைக்கான தீவனத் தேவைகளை நிறைவு செய்கின்றன. ந்தியாவில் 0.5 ஏக்கரிலிருந்து 1.25 ஏக்கர் நிலப்பரப்பு வரை வீட்டுத் தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன.வீட்டுத்தோட்டங்கள் பன்முகபயன்பாடுடைய மரங்கள் மற்றும் பயிர்கள் வளர்ப்பதுடன் சீரிய நிலப்பயன்பாட்டுத் திட்டமாகவும் முன் வைக்கப்படுகிறது.மரவளர்ப்பும் இதனுடன் கால்நடைப்பராமரிப்பும் குடும்ப உறுப்பினகளாலேயே மேற்கொள்ளப்படுகிறது.
வீட்டுத்தோட்டங்கள் பல அடுக்கு முறையென்றும் அல்லது பல அடுக்கு பயிரிடுதல் முறை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் வீட்டுத் தோட்டங்கள் அதிக உற்பத்தித்திறன், நிலையான மற்றும் அதிக செய்முறை சார்ந்தது. ஒரு குடும்பத்தின்  உணவுத் தேவையை நிறைவு செய்வதை முதல்நிலையாக உடையது.

வீட்டுத்தோட்டங்களின் அமைப்பு

வீட்டுத் தோட்டங்கள் பல பயிர் இனங்களின் தொகுப்புடன் 3 அல்லது 4 செங்குத்து மேற்பரப்பை முன் வைக்கிறது.வேறு வேறு அடுக்குகளுடன் அமைக்கப்படுகிறது. தரையையொட்டி வளரும் கிழங்குச் செடிகள், குறும்பயிர்கள், மிக உயரமாக வளரும் மா, தென்னை போன்ற மரங்கள் மிதமான உயரத்துடன் வளரும் பழ மரங்கள் போன்றவற்றுடன் இவை பயிரிடப்படுகிறது.
குறைந்த உயரத்தில் அதாவது 1 மீட்டர் வரை காய்கறிகளும் 1 க மீட்டர் வரையுள்ள குத்துச் செடிகளும், 25 மீ உயரம் அல்லது அதற்கு மேல் வளரும் மரங்களும், 20 மீட்டரை விட குறைவாக வளரும் பழ மரங்களும் வெவ்வேறு அடுக்குகளாக பயிரிடப்படுகின்றன.

மர இவைகளின் தேர்வு

1. பல்லாண்டுத் தாவர இனங்கள்: மா, பலா, தென்னை, கொய்யா, எலுமிச்சை, வேம்பு மற்றும் பல
2. ஈராண்டுத் தாவரங்கள்:
வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், வாழை, பட்டாணி, முள்ளங்கி மற்றும் பல

ஆ.மரத்தடுப்பு வரிசைகள்

அதி வேகமாக வளரும் மரங்களுடன், தீவனமாகப் பயன்படக்கூடிய புதர்ச்செடிகள் மற்றும் பசுந்தாள் தரும் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவை மண் மூடாக்கு மண் வளப் பாதுகாப்பு பசுந்தாளை உரம் ஆகியவையாக பயன்படுகின்றன. இத்தகைய தாவரஇனங்கள் முறையே கல்யாண முருங்கை, அபாபுல் வாகை ஆகியவை பொதுவாக விளைவிக்கப்படுகின்றன.


IV) வேறு திட்டங்கள்

அ.மரம் மற்றும் தேனி வளர்ப்பு
பண்ணையில் பல்வேறு வகையான மலர்கள் உடைய மரங்களை தேனீக்கள் தேன் சேகரிப்பதற்கு ஏதுவாக விளைப்பதும், தேன் கூடுகளை அமைத்து தேனி வளர்ப்பு மேற்கொள்வது மற்றுமொரு நிலப்பயன்பாட்டுத் திட்டமாகும்.

ஆ.நீர்வனங்கள்
இம்முறையில் பல்வேறு மரங்கள் மற்றும் புதர்கள் மீன்கள் உணவாக உட்கொள்ளும் வகையில் மீன் குட்டைகளைச் சுற்றிலும் வளர்க்கப்படுகின்றன. மரம் மற்றும் புதர்களிலிருந்து உதிரும் இலைகளை மீன்கள் உணவாக உட்கொள்ளுகின்றன.

இ.கலப்பு மரத்தோப்பு
இம்முயைில் பல்வகைப்பயன்பாட்டிற்குரிய மரங்கள் கலப்பாகவோ இனவாரியாக தனித்தோ நட்டு வளர்க்கப்படுகின்றன. இவை விறகு, தீவனம், மண் வளப் பாதுகாப்பு மற்றும் மண்வள மீட்பு போன்றவை இவற்றுள் அடங்கும்.

 

No comments:

Post a Comment