கலவை மீன்கள் வளர்ப்பு
அறிமுகம் மீன் பழங்காலத்திலிருந்தே இயற்கை ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு மலிவான மற்றும் எளிதில் செரிமானத்திற்கு ஏற்ற புரதம் நிறைந்த மற்றும் மனிதர்களுக்கு ஏற்ற உணவாகும். எனினும், சுற்றுப்புறச் சூழல் கேடு மற்றும் அதிக சுரண்டல் காரணமாக மீன்களின் வரத்து குறைகின்றது, மீன் உற்பத்தியை பெருக்க நிறைய வழி முறைகளை கடைபிடிக்க விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட அல்லது செயற்கை முறையில் மீன் உற்பத்தியையம் நுகர்வையும் எளிதான முறையில் பெருக்கலாம். விவசாயிகள் எளிதான முறையில் கிராமத்தில் குளம், நீர் தொட்டி அல்லது மற்ற நீர் ஆதாரங்களிலும் மீன் வளர்ப்பை மேற்கொண்டு தங்களது நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இது மேலும் மீன் வளர்ப்பில் முன் அனுபவ திறமை பெற்றிருந்தாலும், இல்லையென்றாலும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வருமானம் ஈட்டக் கூடிய தொழிலாக அமைகிறது. நம் நாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான மீன்களை வளர்ப்பது மீன் வளர்ப்பில் தற்போது உள்ள மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் தான் கூட்டு மீன் வளர்ப்பு முறையாகும். இந்த தொழில்நுட்பம் செயற்கை உணவு கொடுப்பதன் மூலம் கூடுதலாக குளத்தில், தொட்டியில் மீன் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதால் பரவலாக உள்ளது. 2 மீட்டர் ஆழம் உள்ள வற்றாத நீர் குளம், தொட்டி நீரில் மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம். எனினும், குறைந்தபட்சம் ஒரு மீட்டருக்கும் குறைவான தண்ணீர் உள்ள பருவகால குளங்களில் குறுகியகாலம் மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். |
அறிமுகம்
மீன் பழங்காலத்திலிருந்தே இயற்கை ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு மலிவான
மற்றும் எளிதில் செரிமானத்திற்கு ஏற்ற புரதம் நிறைந்த மற்றும்
மனிதர்களுக்கு ஏற்ற உணவாகும். எனினும், சுற்றுப்புறச் சூழல் கேடு மற்றும்
அதிக சுரண்டல் காரணமாக மீன்களின் வரத்து குறைகின்றது, மீன் உற்பத்தியை
பெருக்க நிறைய வழி முறைகளை கடைபிடிக்க விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
கட்டுப்படுத்தப்பட்ட அல்லது செயற்கை முறையில் மீன் உற்பத்தியையம்
நுகர்வையும் எளிதான முறையில் பெருக்கலாம். விவசாயிகள் எளிதான முறையில்
கிராமத்தில் குளம், நீர் தொட்டி அல்லது மற்ற நீர் ஆதாரங்களிலும் மீன்
வளர்ப்பை மேற்கொண்டு தங்களது நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
இது மேலும் மீன் வளர்ப்பில் முன் அனுபவ திறமை பெற்றிருந்தாலும்,
இல்லையென்றாலும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வருமானம் ஈட்டக் கூடிய தொழிலாக
அமைகிறது. நம் நாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான மீன்களை வளர்ப்பது
மீன் வளர்ப்பில் தற்போது உள்ள மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இந்த
தொழில்நுட்பம் தான் கூட்டு மீன் வளர்ப்பு முறையாகும். இந்த தொழில்நுட்பம்
செயற்கை உணவு கொடுப்பதன் மூலம் கூடுதலாக குளத்தில், தொட்டியில் மீன்
உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதால் பரவலாக உள்ளது. 2 மீட்டர் ஆழம்
உள்ள வற்றாத நீர் குளம், தொட்டி நீரில் மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்.
எனினும், குறைந்தபட்சம் ஒரு மீட்டருக்கும் குறைவான தண்ணீர் உள்ள பருவகால
குளங்களில் குறுகியகாலம் மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம்.
தெகுப்பு மீன் வளர்ப்பில் வளர்க்கப்படும் மீன் இனங்கள்
பொருந்தக் கூடிய மற்றும் மீன்கள் உணவு பழக்கம் வகையை பொறுத்து, பின்வரும் வகையில் இந்திய பிரபல மீன் வகைகள் தொகுப்பு மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தில் பரிந்துரைக்கப்படுகிறது:
உணவு பழக்கம் தீவன மண்டலம்
இந்திய கெண்டை
பெயர் | உணவு பழக்க முறைகள் | |
கட்லா | ப்லான்க்டன் உண்ணி | மேற்பரப்பு உண்ணிகள் |
ரோகு | அனைத்துண்ணி | இடைப்பரப்பு உண்ணிகள் |
மிர்கால் | அனைத்துண்ணி | கடைபரப்பு உண்ணிகள் |
அயல்நாட்டு கெண்டைகள்
பெயர் | உணவு பழக்க முறைகள் | |
வெள்ளி கெண்டை | இலை ப்லான்க்டன் உண்ணி | மேற்பரப்பு உண்ணிகள் |
புல் கெண்டை | தாவரஉண்ணி | மேற்பரப்பு, இடைப்பரப்பு உண்ணிகள் |
கெண்டை | அனைத்துண்ணி | கடைபரப்பு உண்ணிகள் |
செயலாற்றல் : குளங்கள் மற்றும் நீர் தொட்டிகளில் மீன் வளர்ப்பு 2.85 மில்லியன் ஹெக்டேர் அளவு இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. கூடுதலாக தேங்கிய நீர், மற்றும் விவசாயத்திற்கு ஏற்ற அளவில் நீர் கிடைக்காத விவசாய நிலங்களையும் மீன் வளாப்பு பகுதிய மாற்றியதில் 0.78 மில்லியன் ஹெக்டேரிலும் கூடுதலாக மீன் வளாப்பு செய்யப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% மீன் வளர்ப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.தற்போது குளங்களிலிருந்து சராசரி உற்பத்தித்திறன் 2160 கிலோ / எக்டர் /ஆண்டு என்று மதிப்பிடப்படுகிறது. இது நாட்டின் மீன் வளர்ப்பை மிகப் பெரிய பரப்பை காட்டுகிறது. 1997-98 ல் அறிவியல் அடிப்படையில் 4.56 லட்சம் ஹெக்டேரில் தொட்டிகள், குளங்களில் மீன் வளர்ப்பு கிடைமட்ட விரிவாக்கம் மூலம் கூட்டு மீன் உற்பத்தி 16% ஆக இருந்தது. |
தொழில்நுட்ப அளவுகள்
கூட்டு மீன் உற்பத்தியின் தொழில்நுட்ப கூறுகளாக தளம்
தேர்வு, வளர்ச்சி பொருட்கள், முந்தைய மற்றும் பிந்தைய மீன் குங்சுகள்
இருப்பின் நடவடிக்கைகள், இருப்பின் அளவுகள், கருத்தரித்தரித்தல், உணவு
முதலியன இதன் தொழில்நுட்ப அளவுகளாகும்.
தொழில்நுட்ப அளவுருக்கள்
கூட்டு மீன் உற்பத்தி திட்டத்தில் பின்வருன தொழில்நுட்ப அளவு கூறுகளாக கருதப்படுகிறது.
குளம் தேர்ந்தெடுத்தல்
மண் தண்ணீர் தேக்கிவைக்கும் திறனும் மற்றும் வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்படாத குளத்தை தோந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும். மீன் வளர்ப்பிற்காக சேறு சகதியுமான குளத்தை நன்றாக தண்ணீரின்றி உலர்த்தி, தூர் எடுத்து, நீர் உள்புறம் மற்றும் வெளிப்புறம் செல்வதற்கு ஏற்றவாறு புதுப்பிக்க வேண்டும். குளம் ஒருவடையதாகவோ அல்லது குத்தகைக்கோ எடுத்திருந்தால் இச்செயல்பாடுகள் குத்தகைகாலத்தை நீடிக்கும் போது அல்லது குத்தகை செலுத்தும் காலத்தில் செய்ய வேண்டும். குளத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
1. | குளங்களை தூர் எடுத்தல் |
2. | குளங்களை ஆழமாக்குதல் |
3. | புதிய குளங்களை தோண்டுதல் |
4. | கரையணையை பழுது பார்த்தல் /கட்டுமானம் செய்தல் |
5. | உட்புற வாயில் /வெளி புற வாயில் கட்டுமானம் செய்தல் |
6. | கட்டுமான அமைப்புகள், வாட்ச்மேன் குடிசைகள், தண்ணீர்கான ஏற்பாடுகள் / மின்சாரத்திற்கான ஏற்பாடுகள் மேலும் இத்திட்டத்திற்கு தேவையை பொறுத்து அமைகின்றது. |
குளங்கள் மேலாண்மை
மீன் வளர்ப்பில் மிக முக்கியமாக
மீன் குஞ்சுகளை இருப்பு வைப்பதற்கு முன்னும் பின்னும் குளத்தை மேலாண்மை
செய்வது மிக முக்கியமாகும்.அவ்வாறு மேலாண்மை செய்வதில் பபின்வரும்
பல்வேறு நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
இருப்பு வைப்பதற்கு முன் மேலாண்மை
புதிய குளங்களில், மீன்களை இருப்பு வைப்பதற்கு முன்
குளத்தின் நீரில் சுண்ணாம்புகலவையை கொண்டு கலக்க வேண்டும். எனினும்,
குளத்தில் உள்ள தேவையற்ற களைகள் மற்றும் கையால் அல்லது இயந்திம் மற்றும்
ரசாயனம் கொண்டோ குளத்தை சுத்தம் செய்ய வேண்டும். பல்வேறு முறைகளில்
இவ்வேலை செய்கின்றனர்.
- களைகளை கையால் /இயந்திரத்தால் அல்லது ரசாயன மூலம் நீக்குதல்
- தேவையற்ற பிற உயிரினங்கள் மற்றும் கொன்றுண்ணும் இயல்புடை மீன்களை இலுப்பை பிண்ணாக்கு 2500 கிலோ /எக்டர் அல்லது குளத்தை சுத்தம் செய்து சூரிய ஒளியில் உலர்த்தி அப்புறப்படுத்தி விட வேண்டும்.
- சுண்ணாம்பு கலப்பு – குளத்தில் இயற்கையில் இருப்பதை விட அமில காரங்கள் குறைவாக இருக்கும் குளத்தில் தேவையான அளவு சுண்ணாம்பு கலவை கொண்டு pH அளவை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக சுண்ணாம்பு கலவையால் பின்வரும் பாதிப்புகள் எற்படுகின்றன
ஆ.கார அமில அளவில் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்கப்படுகிறது.
இ. இது மண்ணில் ஒட்டுண்ணிகள் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது.
ஈ. இதன் நச்சுத்தன்மையால் ஒட்டுண்ணிகள் கொல்லப்படுகிறது மற்றும்
உ. இது விரைவில் கரிம சிதைவு ஏற்படுகிறது.
சாதாரணமாக தேவைப்படும் சுண்ணாம்பு கலவை அளவு விகிதம் 200 – 250 கி.கி /எக்டர்.
சாதாரணசுண்ணாம்புஅளவுகள்கிலோ / எக்டர் 200 முதல் 250 வரைமாறுபடுகிறதுவிரும்பிய. எனினும், நீர் கார அடிப்படையில் உண்மையான சுண்ணாம்பு கலவை அளவு பின்வருமாறு கணக்கிடப்பட வேண்டும்.
மண் pH | சுண்ணாம்பு (கிலோ / எக்டர்) |
4.5-5.0 | 2,000 |
5.1-6.5 | 1,000 |
6.6-7.5 | 500 |
7.6-8.5 | 200 |
8.6-9.5 | - |
புதிய குளமாக இருந்தால் தேவையான அளவு சுண்ணாம்பு கலவை இட்ட பிறகு குளத்திற்கு தேவையான அளவு மழை நீரை சேமிக்க வேண்டும் அல்லது பிற நீர் ஆதாரங்களிலிருந்து நீர் சேமிக்க வேண்டும்.
உரமிடுதல்
குளத்திற்கு உரமிடுவதால் குளத்தில் மீன் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. குளத்தின் மண் தரத்தை அறிந்த பிறகு குறத்திற்கு பொருத்தமான உரதிட்டத்தை மேற்கொள்ள வேண்டும். கரிம மற்றும் கனிம உரங்களை கலந்து தரும் போது அது சிறந்த பயனை அளிக்கும். மீன் குளத்தில் மீனின் வளர்ச்சி, மீனிற்கு கிடைக்கும் உணவு இருப்பு, இராசயன நிலைகள், கால நிலைகள் இவற்றை பொறுத்து குளத்திற்கு உர வழங்கலை மேற்கொள்ள வேண்டும்.
கரிமம்
அ. கரிமம் | : |
சுண்ணாம்பு கலவை இட்ட 3 நாட்களுக்கு பிறகு தான் இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும். மாட்டு சாணம் 5000 கிலோ /எக்டர் அல்லது இதற்கு சமமான மற்ற இயற்கை உரம் |
ஆ. கனிமம் | : |
இயற்கை
உரம் இட்ட 15 நாட்களுக்கு பிறகு கனிம உரம் இட வேண்டும். நைட்ரஜன்
அடங்கிய மற்றும் பாஸ்பேட் உரங்கள் கீழே குறிப்பிட்ட மண்வளத்தின் இயல்பு
படி அவற்றின் தேவை மாறுபடும். எனினும் நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் உரங்கள் கீழே கொடுக்கப்பட்ட விகிதங்கள் அளவிற்கு கொடுக்க வேண்டும். |
கனிம உரம் இடுதல் ( கிலோ கிராம்/ எக்டர்/மாதம்)
மண்ணின் வளம் | அமோனியம் சல்பேட் | யூரியா |
ஆ. நடுத்தரம் (26-50) இ.குறைந்தபட்சம் (25 வரை) |
70 90 140 |
30 40 60 |
ஆ. நடுத்தரம் (4-6) இ.குறைந்தபட்சம் (3 வரை) |
சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 40 50 70 |
ட்ரிபிள் சூப்பர் பாஸ்பேட் 15 20 30 |
ஆ.இருப்பு வைத்தல்
உரமிட்டு 15 நாட்களுக்கு பிறகு
குளத்தில் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்கலாம். 10 செ.மீ விரல்
(தோராயமாக)அளவு உடைய மீன் குஞ்சுகளை ஒரு எக்டருக்கு 5000 எண்ணிக்கையில்
இருப்பு வைக்கலாம். எனினும், சிறிய அளவிலான குஞ்சுகளை பயன்படுத்தும் போது,
அவற்றில் சில இறந்த பிறகும் பொருத்தமான எண்ணிக்கையில் இருப்பு வைக்க
வேண்டும். கிடைக்கும் மீன்கள் மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில்
மீன் குஞ்சுகளை பின்வரும் விகிதத்தில் 3, 4, அல்லது 6 இனங்கள் இணைந்து
இருப்பு வைக்கலாம்.
இனங்களின் கூட்டு (விகிதம்)
இனங்கள் | 3 – இனங்கள் | 4-இனங்கள் | 6 – இனங்கள் |
கட்லா | 4.0 | 3.0 | 1.5 |
ரோகு | 3.0 | 3.0 | 2.0 |
மிர்கால் | 3.0 | 2.0 | 1.5 |
இந்திய கெண்டை | - | - | 1.5 |
புல் கெண்டை | - | - | 1.5 |
சாதாரண கெண்டை | - | 2.0 | 2.0 |
பின் இருப்பு செய்தல்
அ. கூடுதல் உணவு
இயற்கையில் குளத்தில் கிடைக்கும் உணவுகளை காட்டிலும் மீன்களுக்கு அதிக உணவு தேவைப்படும். மீன்கள் சம அளவில் தவிடு மற்றும் பிண்ணாக்கு கலவை தினமும் உணவாக எடுத்துக் கொள்ளும். உணவை ஒரு மூங்கில் தட்டில் வைத்து அத்தட்டை குளத்தின் அடியில் வைக்கலாம் அல்லது குளத்தின் மூலைகளில் உணவை தெளிக்கலாம். பரிந்துரைக்கப்படும் உணவு வீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
காலம் | ஒரு நாளைக்கான அளவு கிலோ |
I முதல் காலாண்டு | 1.5 – 3 |
II இரண்டாம் காலாண்டு | 3 -6 |
III மூன்றாம் காலாண்டு | 6-9 |
IV நான்காம் காலாண்டு | 9 – 12 |
மொத்தம் ( ஒரு வருடத்திற்கு) | 1,655 – 2,700 |
ஆ.தொழுவுரம் இடுதல்
1. கரிம உரம் மாத தவணைஅடிப்படையில் @ 1000கிலோ /எக்டர் என்ற அளவில் அளிக்கலாம்.
2. கனிம உரம் மாத இடைவெளியில் கரிம உரம் இடாத
மாதத்தில் இட வேண்டும். எனினும் மாத உரங்களின் வீதம் குளத்தில் உற்பத்தி
மற்றும் மீன்களின் வளர்ச்சியை சார்ந்தது.அதிகபடியான உரத்தினால்
இயூட்ரோஃபிகேஷன் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இ.அறுவடை
அறுவடை பொதுவாக ஒரு வருட முடிவில், மீன்கள் சராசரி
எடை 750 கிராமிலிருந்து 1.25 கிலோ அளவில் இருக்கும் போது அறுவடை
மேற்கொள்ளப்படும். ஒரு வருடத்திற்கு 4 முதல் 5 டன் /எக்டர் என்றளவில்
உற்பத்தி பெறலாம்.எனினும், பொருளாதார ரீதியில் பணிபுரியும் போது உற்பத்தி 3
டன் /எக்டர்/வருடம். குளத்தின் ஒரு பகுதியை நீரின்றி வறண்ட செய்து
மற்றும் வலைகொண்டும் அறுவடை செய்யப்படுகிறது. சில சமயங்களில் குளங்கள்
முழுமையாக நீரின்றி வறட்சியாக்கப்படுகிறது.
மீன் வளர்ப்பில் செங்குத்து விரிவாக்கம்
எக்டர் மீன் வளர்ப்பில் மீன் உற்பத்தியை அதிகரிக்க
தற்போதைய தொழில் முனைவோர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். இதனை முக்கிய
நடவடிக்கையாக முதல் ஆண்டில் மேற்கொள்ளும் போது மீனின் வளர்ச்சி எதிர்பாரா
அளவிற்கு இருக்கும், அதிக இருப்பு மற்றும் அதிக அளவில் அறுவடையை மீன்கள்
500 கிராம் அளவிற்கு வளர்ச்சி பெற்ற பிறகு செய்ய வேண்டும், அதிகளவு
இருப்பு மற்றும் அதிகளவு அறுவடை, குளத்தில் காற்று வசதிக்கு வழி செய்யும்,
ஆடு, மாடு, கோழி, பன்றி அல்லது வாத்து போன்ற கால்நடை வளர்ப்பினுடனான
ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பில் மீன் குளத்திற்கு தினமும் அதிகபடியான இயற்கை
உரம் கிடைக்கும். இது மேலே குறிப்பிட்டது போல் பல்வேறு நடவடிக்கைகள் மூலம்
வருடத்திற்கு எக்டருக்கு மீன் உற்பத்தி 7 முதல் 10 டன் உற்பத்தி
அதிகரிக்கும்.
1 எக்டர் குளத்திற்கான வரவு செலவு
பொருட்கள் | புதிய குளம் 1 மீட்டர் ஆழம் தோண்டுதல் |
அ.மூலதனச் செலவு 1. குழி தோண்டு10,000 மீ3 @ ரூ.15/மீ3 2. உள்புறம் மற்றும் வெளிப்புறம் வழி அமைத்தல் (L.S) 3. கருவிகள் & கியர்ஸ் ((L.S) 4.மொத்தம் |
150000 20000 5000 175000 |
ஆ. நடைமுறைச் செலவுகள் 1. சுண்ணாம்பு 500 கி @ ரூ.15/கிலோ 2. மீன் குஞ்சுகள் 5000 எண்ணிக்கை @ ரூ.400/1000 எண்ணிக்கை 3. இயற்கை உரம் (மாட்டுசாணம்) 15 டன்கள் @ ரூ.300/டன் 4. யூரியா 330 கிலோ @ ரூ.5 /கிலோ 5. ட்ரிபிள் சூப்பர் பாஸ்பேட் 165 கிலோ @ ரூ.5 /கிலோ 6.கடுகு பிண்ணாக்கு கிலோ1350 கிலோ @ ரூ.6/கிலோ 7.அரிசி தவிடு 11350 கிலோ @ ரூ. 3 /கிலோ 8.காப்பீடு தொகை @ 4% விதை மற்றும் உரம் 9.இதர செலவுகள் அறுவடை, சந்தையிடல் செலவுகள் மற்றும் கண்காணிப்பு செலவுகள் |
2500 2000 4500 1650 825 8100 4050 960 2415 2700 |
இ.வருமானம் 1. உற்பத்தி (இரண்டாம் வருடத்தில்) 2. விற்பனை விலை (ஒரு கிலோ) 3. மொத்த வருமானம் |
3000 கிலோ ரூ.30/- ரூ.90,000/- |
No comments:
Post a Comment