Magme College of Agriculture & Tech

Magme College of Agriculture and Tech

Upcoming Event

LightBlog

Breaking

Sunday, August 7, 2022

மீன்வளர்ப்பு வகைகள்


 மீன்வளர்ப்பு வகைகள்



விரிவான மீன்வளர்ப்பு (Extensive Fish culture)

பரந்த இடங்களில் குறைவான எண்ணிக்கையிலான மீன்களை, இயற்கையான உணவளித்து வளர்த்தல் ஆகும்.

தீவிர மீன் வளர்ப்பு (Intensive Fish  Culture):


இது மிகக் குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், செயற்கையான உணவளித்து வளர்க்கும் முறையாகும்.

குளத்தில் மீன்வளர்ப்பு (Pond Culture):


குளத்திலுள்ள நீரில் மீன்களை வளர்ப்பது.

ஆறுகளில் மீன்வளர்ப்பு (Reverine Fish Culture):

ஓரும் நீரில் மீன்களை வளர்த்தல்.

அணைகளில் மீன்வளர்ப்பு (Dam Culture):


செயற்கையாக கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களில் மீன்களை வளர்க்கும் முறையாகும்.

ஏரிகளில் மீன்வளர்ப்பு (Lake Culture):

இயற்கையான நீர்நிலைகளான ஏரிகளில் மீன்களை வளர்த்தல்,

ஒற்றைவகை மீன்வளர்ப்பு (Mono Culture):

ஒரு வகை மீனை மட்டும் நீர்நிலைகளில் வளர்த்தல் ஒருவகை மீன் வளர்ப்பு எனப்படுகிறது. இது ஒற்றையின மீன் வளர்ப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

பலவகை மீன்வளர்ப்பு (Poly Culture):

ஒன்றுக்கும் மேற்பட்ட மீன் வகைகளை ஒன்றுசேர நீர்நிலைகளில் வளர்த்தல் ஆகும். இது கலப்பு மீன்வளர்ப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த மீன் பண்ணை:

விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடைவளர்ப்புப் பண்ணைகள்  ஆகியவற்றோடு சேர்த்து
மீன்களை வளர்க்கும் முறையே ஒருங்கிணைந்த மீன் பண்ணை
எனப்படுகிறது. நெற்பயிர், கோழிகள், கால்நடை, பன்றிகள் மற்றும் வாத்துகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களும் வளர்க்கப்படுகின்றன.

--------------------------------------------------------------------------------------------------------------------------

மீன் வளர்ப்பிலுள்ள குளங்களின் வகைகள்:

மீனின் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பல்வேறுபட்ட குளங்கள் மீன் பண்ணைகளுக்குத்  தேவைப்படுகின்றன. அவையாவன:

1.இனப்பெருக்க குளம்:


ஆரோக்கியமான,  இனப்பெருக்கத்திற்கேற்ற, முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்களானவை சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள்  அனுப்பப்படுகின்றன. பெண் மீன்களால் வெளியிடப்பட்ட முட்டைகளானவை விந்துக்கள் மூலம் கருவுறுதல் அடைகின்றன. இந்த கருவுற்ற முட்டைகள் நீரின் மேற்பகுதியில் நுரைபோன்று கூட்டமாக மிதந்து காணப்படுகின்றன.

2.குஞ்சு பொரிக்கும் குழிகள்:

இனப்பெருக்கக் குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள், பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன. பொரிப்பகங்கள் மற்றும் பொரிப்பு வலைத்தொட்டிகள் ஆகியவை, இரண்டு வகையான மீன் பொரிக்கும் குழிகளாகும்.

3.நாற்றாங்கால் குளங்கள்:

குஞ்சு பொரிக்கும் குழிகளில் பொரிக்கப்பட்ட இளம் மீன் குஞ்சுகளானவை 2 முதல் 7 நாட்களுக்குப் பிறகு, வளர்க்கும் குளங்களுக்கு மாற்றப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகளானவை 60 நாட்கள் வரை நாற்றாங்கால் குளத்தில் சரியான அளவு உணவு கொடுக்கப்பட்டு 2-2.5 செ.மீ அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.
 

4.வளர்க்கும் குளங்கள்:

இளம் மீன்களை வளர்ப்பதற்கு, வளர்க்கும் குளங்கள் பயன்படுகின்றன. இளம் மீன்கள் நாற்றாங்கால் குளத்திலிருந்து வளர்க்கும் குளத்திற்கு மாற்றப்பட்டு மூன்று மாதம் வரை அதாவது 10 முதல் 15 செ.மீ நீளமுடைய மீனாக வளரும் வரை வளர்க்கப்படுகின்றன. இங்கு இளம் மீன்களானவை இளரிகளாக (finger lings)  மாற்றமடைகின்றன.

5.இருப்புக் குளங்கள்:

இவை வளர்ப்புக்குளம் அல்லது உற்பத்திக்குளம் எனவும் அழைக்கப்படுகின்றன. விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மீன் குஞ்சுகளை விடுவதற்கு முன் இக்குளமானது கரிம மற்றும் கனிம உரங்கள் இடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment