Magme College of Agriculture & Tech

Magme College of Agriculture and Tech

Upcoming Event

LightBlog

Breaking

Sunday, August 7, 2022

கெண்டை மீன் வளர்ப்பு / Carp Fish Farming

 கெண்டை மீன் வளர்ப்பு

 

கெண்டை மீன் வளர்ப்பு /  Carp Fish Farming

கிராமப்புற குளம், குட்டைகளில் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு மூலம் அதிக லாபம் பெறலாம்.

காலத்தின் மாற்றத்திற்கேற்ப விவசாயிகளும் தங்களுக்கு அதிக லாபம் தரும் தொழில்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக்கு கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக இருக்கும்.

விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள ஊராட்சிக் குளங்கள், குட்டைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபடலாம்.

மீன் வகைகள்

கெண்டை மீன்களில் பலவகைகள் உள்ளன. அவற்றில் அதிவேக வளர்ச்சி பெறும் கெண்டை மீன்களைத் தேர்வு செய்து குளங்களில் வளர்த்தால் பெருமளவில் பயன் கிடைக்கும்.

தோப்பா கெண்டை, தம்பட கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை உள்ளிட்டவை குளங்களில் வளர்க்க ஏதுவான மீன்கள் ஆகும். இந்த மீன்களை குறிப்பிட்ட இன விகிதங்களின் படி ஒன்றாகக் கலந்து வளர்த்தால் நல்ல உற்பத்தித் திறனும் லாபமும் பெற முடியும். இவ்வாறு கூட்டாக வளர்ப்பதே கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்பாகும்.

மீன்களின் தன்மை

ஒவ்வொரு வகை மீனும் தனித்தன்மையான உணவுப் பழக்கத்தைக் கொண்டது. கெண்டை மீன்களின் உணவு மாற்று விதிகத் திறன் அதிகம். இவை வேகமான வளர்ச்சித் திறன் உடையவை. பிறவகை மீன்களுடன் இணைந்து வாழும் திறன் உடையவை.

(1) சாதா கெண்டை

புழு, பூச்சிகள், குளத்தடியில் உள்ள சிறு தாவரங்கள், விலங்கின நுண்ணுயிரினங்கள், மட்கிய பொருள்கள்.

(2) தோப்பா கெண்டை

விலங்கின நுண்ணுயிர் மிதவைகள்.

(3) தம்பட கெண்டை

விலங்கின நுண்ணுயிர் மிதவைகள்.

(4) புல் கெண்டை

நீர்த் தாவரங்களான ஹைடிரில்லா, வேலம்பாசி, வாத்துப் பாசி, புல். இவை தவிர அனைத்து மீன்களுக்கும் பொதுவான உணவாக மட்கிய பொருள்கள், தாவர, விலங்கின நுண்ணுயிர்கள், மிதவைகள், புழு, பூச்சிகள் ஆகியவை உள்ளன.

உணவுப் பொருள் உற்பத்தி

வளர்ப்பு மீன்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களின் உற்பத்தியை இயற்கை உரம், செயற்கை உரமிடுதலின் மூலம் நாமே செய்யலாம். ஒரு ஹெக்டேர் நீர்ப் பரப்புள்ள குளத்துக்கு 10 ஆயிரம் கிலோ மாட்டுச் சாணம், 200 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 40 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றைச் சேர்த்து அதில் 6-இல் ஒரு பகுதியை, மீன் குஞ்சுகளை குளத்தில் விடுவதற்கு 10 நாள்கள் முன்னதாக இட வேண்டும். மீதமுள்ள உரத்தை 15 தினங்களுக்கு ஒரு முறை பகிர்ந்து இட வேண்டும். இதன்மூலம் குளத்தில் நுண்ணுயிர்கள் உற்பத்தியாகி மீன்களுக்கு உணவாகும்.

லாபம் தரும் கூட்டுக் கெண்டை மீன் வளர்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி, விவசாயிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பயன்பெறலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1) கூட்டு மீன் வளர்ப்பிற்கு பெருங்கெண்டை மீன் இனங்களே அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏன்?

ஏனெனில் பெருங்கெண்டை மீன் இனங்கள் தாவர உணவுகளையும், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களையும் உண்ணுகின்றன. எனவே உற்பத்தி செய்வது எளிது. மேலும் இவை விரைவில் வளர்ந்து பெரிய அளவை அடைந்துவிடுகின்றன.

2) கெண்டை மீனில் எத்தனை வகைகள் உள்ளன?

கட்லா, ரோகு, மிர்கால் ஆகியவை  இந்தியப் பெருங்கெண்டை இனங்கள். வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, மற்றும் சாதாரண கெண்டை போன்றவை அயல்நாட்டு கெண்டைகள். இவற்றில் இந்திய கட்லா இனம் மிக வேகமாக வளரும் தன்மை கொண்டது.

3) பிற  அசைவ உணவுகளை விட மீன் சிறந்த ஆரோக்கியமான உணவாக கருதப்படுவது ஏன்?

தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது.

4) மீன் இறைச்சியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் யாவை?

மீன்களில் பொதுவாக 60 - 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 - 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 - 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 - 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.

5) மீன் வளர்ப்பைப் பாதிக்கும் முக்கியக் காரணிகள் யாவை?

நீரின்  வெப்பநிலை, கலங்கல் தன்மை, நீரின் கார அமிலத் தன்மை, கரையும் ஆக்ஸிஜன், (கரியமில வாயு), கார்பன் - டை - ஆக்ஸைடு, மொத்த காரத்தன்மை, நீரின் கடத்துதிறன், மண்ணின் வெப்பநிலை, மண்ணின் கார அமிலத் தன்மை, மண்ணின் அங்கக கார்பன், பாஸ்பரஸ், பொட்டாஷ், நீரின் உயிர்நிறை போன்ற காரணிகள் மீன்வளர்ப்பிற்கு அத்தியாவசியமானவை ஆகும்.

ஆதாரம்: தமிழ்நாடு மீன்வளத் துறை

 

No comments:

Post a Comment